உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இவ்­வ­ரு டம் இறு­தி­வ­ரையில் பிற்­போ­ட­வுள்­ள­தாக அர­சாங்க தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் ஜூன் மாத­ம­ளவில் நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னிக்­க­ப்பட்­டி­ருந்­த­து.

எனினும் தற்­போ­துள்ள நிலையில், இவ்வ­ருடம் இறு­தி­வரையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­பில்லை என தெரிய வரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்க ஆட்­சி­யின் போது வரை­ய­றுக்­கப்­பட்ட எல்லை நிர்­ண­யத்தில் பல குறை­பா­டுகள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

எனவே, எல்லை நிர்­ணயம் தொடர்பில் கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்து அதனை தீர்ப்­ப­தற்கு இன்னும் கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது.

ஆகை­யி­னாலே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­பில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மாந­கர சபைகள் உட்­பட 23 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஜூன் மாதம் வரையில் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், பதவிக் காலம் முடி­வ­டைந்­துள்ள 312 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வாகம் விசேட ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

மேலும், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது தொடர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சிகள் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. அத்­துடன், பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்ற பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே குறிப்பிட்டபோதிலும் தேர்தலை நடத்தாது பிற்போடப்பட்டு வருவது தொடர்பில் பல்வேறு தரப்புகள் விமர்சனங்களை முன்வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.