எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.