பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

Published By: Robert

18 Dec, 2017 | 11:24 AM
image

கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட  பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றி­னுள்­ளி­ருந்து  பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அருள் வாக்­குக்­கூறும் நப­ரொ­ரு­வரின் தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 மேற்­படி சிலை­யா­னது  தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் இருந்த கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை  இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்­றுள்­ளது.

 இதன் போது பஜனை குழுவில் பிர­தான  பங்கு வகிக்கும் வசின்டன் என்ற    அருள்­வாக்கு கூறும் நபர் பூஜையின் உச்­சத்தின் போது  மேற்­கு­றிப்­பிட்ட  இடத்தை சுட்­டிக்­காட்டி அங்கு  சிவ­னு­டைய சிலை ஒன்று இருப்­ப­தா­கவும் அதனை மீட்டு பூஜை­களை மேற்­கொள்­ளு­மாறும்  கூறி­யுள்ளார். இதை­ய­டுத்து   தீப் பந்­தங்களை கொளுத்­திக்­கொண்டு   அவ்­வி­டத்­திக்குச் சென்ற இளை­ஞர்கள் குறித்த நபர் கூறிய இடத்­தி­லி­ருந்த கற்­கு­கைக்குள் சென்று பார்த்த போது குறித்த சிலை மண் நிறத்தில் காணப்­பட்­டுள்­ளது.

 இதன் போது  சிலை மீட்­கப்­பட்டு  அதற்கு அபி­ஷேகம் செய்­யப்­பட்டு இராமர் கோயிலின் ஒரு புறத்தில் வைத்­துள்­ளனர்.

சிலை மீட்பு தொடர்­பாக கேள்­வி­யுற்ற கலஹா பொலிஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­தோடு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு இது குறித்து அறி­வித்­துள்­ளனர். குறித்த சிலை­யினை பார்வையிடுவதற்காக கண்டி ,கம்பளை புஸல்லாவை  நுவரெலியா போன்ற பிரதேசங்களிலிருந்தும் மக் கள் வருகை தந்த வண்ணமுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேற்றங்களுக்கு மத்தியில் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்கின்றன...

2024-10-05 16:36:23
news-image

கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளை ...

2024-10-05 16:35:57
news-image

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக...

2024-10-05 16:37:54
news-image

நோயாளர் காவு வண்டி மோதி பாதசாரி...

2024-10-05 21:45:18
news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30