பாகிஸ்தானிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள குவெட்டா நகரத்தில் அமைந்துள்ள ஆலயத்திலேயே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் பிரார்த்தனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு தற்கொலை குண்டுதாரிகள் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தேவாலயம் மீதான தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.