மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும்  முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இருந்து  54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்களிப்பு  நிலையங்களில்  வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதனடிப்படையில் மன்னார் நகர சபைக்கு 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,770 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கு அமைவாக உப்புக்குளம் பிரிவில் 3,073 பேரும், பள்ளிமுனை பிரிவில் 2,123 வாக்காளர்களும், எழுத்தூர் பிரிவில் 2,879 வாக்காளர்களும், சாவக்கட்டு பிரிவுக்கு 1,906 நபர்களும், சௌத்பார் பிரிவில் 2,342 பேரும், பனங்கட்டுகொட்டு பிரிவில் 1,592 நபர்களும், பெற்றா பிரிவில் 855 நபர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் பிரதேச சபைக்கு 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22,468 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் தலைமன்னாரில் 1,203 வாக்காளர்களும், தலைமன்னார் பியர் கிழக்கில் 2,078  நபர்களும் துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1,022 பேரும், பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1,808 நபர்களும், பேசாலை தெற்கு 1,807 பேரும் சிறுத்தோப்பு பிரிவில் 2,332 நபர்களும், புதுக்குடியிருப்பு பிரிவில் 1,482 நபர்களும், எருக்கலம்பிட்டி பிரிவில் 2,888 வாக்காளர்களும், தாழ்வுபாடு பிரிவில் 2,699 நபர்களும், தாராபுரம் பிரிவில் 1,560 நபர்களும், உயிலங்குளம் பிரிவில் 3,562 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நானாட்டான் பிரதேச சபைக் 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15,702 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் வங்காலை வடக்கில் 1,917 வாக்காளர்களும், வங்காலை பிரிவில் 2,026 பேரும், நானாட்டான் பிரிவில் 1,678 நபர்களும், வாழ்க்கைபெற்றான்கண்டல் பிரிவில் 2,577பேரும், இலகடிப்பிட்டி பிரிவில் 2,313 பேரும், முருங்கன் பிரிவில் 2,040 நபர்களும், கற்கடந்தகுளம் பிரிவில் 1,202 பேரும், கட்டையடம்பன் பிரிவில் 1,999 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவுக்கு 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18,636 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கு அமைவாக வெள்ளாங்குளம் பிரிவில் 1,721 வாக்காளர்களும், பெரியமடு பிரிவில் 2,057 நபர்களும், இலுப்பைக்கடவை பிரிவில் 1,515 பேரும், விடத்தல்தீவு பிரிவில் 2,126 நபர்களும், நெடுங்கண்டல் பிரிவில் 1,493 பேரும், ஆட்காட்டிவெளி பிரிவில் 1,501 நபர்களும், அடம்பன் பிரிவில் 1,504 பேரும், வட்டக்கண்டல் பிரிவில் 1,973 நபர்களும், மடு பிரிவில் 1,769 பேரும், இரணை இலுப்பைக்குளம் பிரிவில் 1,308 பேரும், காக்கியான்குளம் பிரிவில் 1,669 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முசலி பிரதேச சபை பிரிவில் 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றில் அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும், அரிப்பு கிழக்கு பிரிவில் 532 நபர்களும், பண்டாரவெளி பிரிவில் 1,493 பேரும், புதுவெளி பிரிவில் 894 நபர்களும், சிலாபத்துறை பிரிவில் 1,801 பேரும், அகத்திமுறிப்பு, கூழாங்குளம் பிரிவில் 1,846 நபர்களும், பொற்கேணி பிரிவில் 1,299 பேரும், மருதமடு, வேப்பங்குளம் பிரிவில் 2,073 நபர்களும், கொண்டச்சி பிரிவில் 1,757 பேரும், பாலைக்குழி பிரிவில் 1,946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.