இந்தியாவில் நேற்று ஆரம்பமான  12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. 

ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் (freestyle swimming)முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இலங்கைக்கு இப்பதக்கத்தை வென்றுள்ளார். 

குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். 

இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில் இலங்கை வீரர் மெத்தியுவ் அபேசிங்க புதிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.