வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவரான 46 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.