மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பேரில் அவர் எதிர்வரும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற மீனவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள எதிர்பாக்கப்படுகிறது.