கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு கர்தினால் எடுத்த முயற்சிகளுக்கு ஞானசார தேரர் தனது ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.