கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்துடன் மோதி 45 வயதுடைய சியம்பலாங்கமுவ, பொதானேகம பிரதேசத்தை சேர்ந்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கலாவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.