உள்ளூர் மொழிகளிலும் எழுத்து வடிவங்களிலும் டொமைன் பெயர்களை உருவாக்குவது பன்மொழி இணையத்திற்கான பாதையை வகுக்கிறது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் இலக்கங்களுக்கான இணையக் கூட்டுத்தாபனம், அதாவது The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு இன்று, இணையத்தின் டொமைன் பெயர் அமைப்பின் அதாவது, Internet’s Domain Name System (DNS)-இன் பரிணாமம் பற்றியும் இலங்கைக்கு அதன் சாத்தியமான சிக்கல் பற்றியும் கலந்துரையாடியது.

தனது புதிய பொதுவான உயர் மட்ட டொமைன், அதாவது Generic Top-level Domain (gTLD) திட்டம் மூலம் இணைய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றை ICANN தற்போது மேற்பார்வை செய்து வருகிறது. 

இது, நுகர்வோரினதும் தொழில்களினதும் நன்மைக்காக DNS, முன்னேற்றும் தெரிவு, போட்டி மற்றும் புதுமை புகுத்தல் ஆகியவற்றின் - இன் மிகப்பெரிய விரிவாக்கத்தைத் தூண்டுகிறது.

சர்வதேச மயப்படுத்தப்பட்ட களப் பெயர்களின், அதாவது Internationalized Domain Names (IDNகள்) அறிமுகம் மூலம் இணையத்தின் பாவனை அளவையும் ICANN அதிகரிக்கிறது. உலகளாவிய சமூகத்தினர் ஒரு டொமைன் பெயரைப் பாவித்து, அவர்களின் சொந்த மொழியில் அல்லது எழுத்து வடிவத்தில் உள்ளடக்கத்தை அணுகுவதற்கு IDNகள் உதவும். தற்போது இலங்கையின் இணைய ஊடுருவல் வீதம் அண்ணளவாக 32 சதவீதமாக உள்ளது. இது ஆசியாவின் சராசரி ஊடுருவல் வீதமான 46.7 சதவீதத்திற்கும் குறைவாகும். இருந்தாலும், மொபைல் புரோட்பாண்ட் சந்தாக்களில் விரைவான அதிகரிப்பு ஏற்படுவது அதை மாற்றலாம். இலங்கை தகவல்தொடர்புகள் ஒழுங்காற்று ஆணையத்தின் தகவல்படி, 2009 ஆம் ஆண்டில் 90,000-க்கு அதிகமாக மட்டுமே இருந்த மொபைல் புரோட்பாண்ட் சந்தாக்கள், 2017 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் 4 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளன.

“DNS ‘ விரிவாக்கமானது, எங்களுடைய பிரதேசத்தில் வளர்ந்துவரும் இணையச் சமூகத்திற்குப் பலனளிக்க உதவும். சகலரும் சகலதும் டிஜிற்றல் மயமாகப் போகின்ற ஒரு சமயத்தில், ஒரு இணையத்தளமும் டொமைன் பெயரும் மக்கள் உட்பட ஒவ்வொரு வியாபாரத்திற்கும் அவசியமானவை. ஒன்லைனில் வரும் அதிகமான மக்களால் தங்கள் சொந்த மொழிகளில் வெளிப்படுத்த முடியும் எனும்போது இணையம் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்” என ICANN இன் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் மீளாற்றல் பிராந்திய முகாமையாளரான சாம்பிகா விஜயதுங்க தெரிவித்தார். 

இலங்கை உட்பட தெற்காசியாவின் சந்தைகளில் அச்சாரம் போடுவதற்கும் எல்லை தாண்டிச் சென்றடைவதற்கும் கூட விஜயதுங்க பொறுப்பு வகிக்கின்றார்.

பொதுவாகப் பேசப்படும் மொழிகளாக சிங்களமும், தமிழும் விளங்குகின்ற இலங்கையில், IDN நிகழ்ச்சித் திட்டமானது, ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் இலங்கையர்கள் அவர்களின் சொந்த எழுத்து வடிவங்களைப் பாவித்து ஒன்லைனில் வருவதற்கு உதவும். முக்கியமான முன்தேவைகளில் ஒன்று, ஒரு Generation Panel (GP)-ஐ உருவாக்குவதாகும். கொள்கை, தொழில்நுட்ப மற்றும் மொழியியல் துறைகளைச் சேர்ந்த உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டிருக்கும் GP ஆனது, உள்ளூர் எழுத்து வடிவத்தில் செல்லுபடியாகும் உயர்மட்ட டொமைன்களை உருவாக்கும் விதிகளை நிர்ணயிக்க உதவுகிறது. இன்று சிங்கள GP-இன் அங்குரார்ப்பணமானது இலங்கையர்கள் அவர்களுடைய எழுத்து வடிவங்களிலும் மொழிகளிலும் டொமைன் பெயர்களை உபயோகிக்கின்ற இணைய டொமைன் பெயர் அமைப்பை அணுகுவதற்கு அவர்களை ஒரு படி நெருக்கமாக அழைத்துச் செல்கிறது.

இலங்கை தகவல் மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்ப முகமை, அதாவது Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA)-இன் திட்டப் பணிப்பாளர் / சட்ட ஆலோசகரான ஜயந்த ஃபெர்னாண்டோவும் ஊடகச் சந்திப்பிற்கு வருகை தந்திருந்தார்.

அவர், “இணையம் எங்களுடைய நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாகிவிட்டது, இது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அரசாங்கமானது இணையத்தின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு, இத்தகைய முன்முனைவுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இதன் ஊடாக, அதிக இலங்கையர்கள் ஒன்லைனுக்கு வர முடியும், எனவே அவர்கள் இணையத்தின் பலன்களை மகிழ்வுடன் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.