சூரிய மண்­ட­லத்­துக்கு வெளியே 8 கோள்­க­ளுடன் காணப்­படும் நட்­சத்­தி­ர­மொன்றை  நாசா விண்­வெளி நிலை­யத்தைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

 எமது  சூரிய மண்­ட­லத்­தை­யொத்த அதி­க­ள­வான கோள்­களைக் கொண்ட நட்­சத்­திர முறை­மை­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது  இதுவே முதல் தட­வை­யாகும்.

 எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து 2,545 ஒளி­யாண்­டுகள்  தொலை­வி­லுள்ள கெப்லர்- –90 என்ற இந்த நட்­சத்­தி­ர­மா­னது எமது சூரி­யனை விடவும் பெரி­யதும் சிறிது சூடா­ன­து­மாகும்.

 அந்த நட்­சத்­தி­ரத்தைச் சுற்றி  எமது பூமி­யி­ருக்கும் நிலையில் வலம் வரும் கெப்லர் -–90i  என்ற கோளானது எமது பூமியை விட சிறியதும் பாறைகள் நிறைந்ததுமாகக் காணப்படுகிறது.

இந்தக் கோள் தனது தாய் நட்சத்திரத்தை சுற்றி வருவதற்கு 14.4  நாட்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அதன் மேற்பரப்பின் வெப்பநிலை 445  பாகை செல்சியஸாகும்.