ஈராக்கில் தீவி­ர­வாதக் குற்­றச்­சாட்டில் கைதான 38  பேருக்கு  தூக்­கி­லிட்டு மர­ண­த ண்­டனை  நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக  அந்­நாட்டு நீதி அமைச்சு தெரி­வித்­தது.

அவர்கள் அனை­வரும் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்கள் என அந்த அமைச்சு கூறு­கி­றது. தென் நக­ரான நஸி­ரி­யஹ்­ஹி­லுள்ள சிறைச்­சா­லையில் அவர்கள்  அனை­வ­ருக்கும் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

கடந்த செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி அந்­நாட்டில் 42  தீவி­ர­வா­தி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் அங்கு இடம்­பெற்ற  பாரிய மர­ண­தண்­டனை நிறை­வேற்­ற­மாக  இது உள்­ளது. ஈராக்­கா­னது கடந்த வரு­டத்தில் குறைந்­தது 88 பேருக்கு மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யி­ருந்­தது. மேற்­படி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு  மனித உரிமை குழுக்களும் சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.