இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லே த்தை அறி­வித்­த­மை­யினால் மத்­திய கிழக்கு நாடு­களின் அமைதி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டலாம் என அர­சாங்கம் அமெ­ரிக்­கா­விற்கு அறி­வித்­துள்­ளது. 

இது குறித்த அறி­விப்பை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷா ப்பை அழைத்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடுத்­துள்ளார்.

அல­ரி­மா­ளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது. மத்­திய கிழக்கு நாடு­களின் அமைதி தொடர்பில் இல ங்கை கரி­ச­­னை­யுடன் உள்­ளது. எனவே இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லத்தை அறி­வித்­துள்­ள­மையின் ஊடாக அந்த நாடு­களின் அமை­திக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

ஜெரு­ச­லத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் அறி­விப்பை, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் டிரம்ப் அண்­மையில் வெளி­யிட்டார். இத­னை­ய­டுத்து இலங்கை உள்­ளிட்ட உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் அதி­ருப்­தியை வெளி­யிட்டு போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். 

சர்ச்­சைக்­கு­ரிய ஜெரு­சலம் நகரை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் அறி­விப்பை அமெ­ரிக்க அதிபர் டிரம்ப் வெளி­யிட்­ட­துடன் ஜெரு­சலம் நகரில் அமெ­ரிக்­காவின் புதிய தூத­ரகம் 2 ஆண்­டு­க­ளுக்குள் அமைக்­கப்­படும் எனவும் அறி­வித்தார். இதன் பின்னர் நிலைமை மொச­ம­டைந்­த­துடன் ஐ நா பாது­காப்பு சபை அவ­ச­ர­மாக கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்­தது.   

இந்­நி­லையில் இலங்கை தனது நிலைப்­பாட்டை அமெ­ரிக்­கா­விற்கு அறி­வித்­துள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­களின் அமை­திக்கு சவாலானதாகவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்தமை அமைந்துள்ளது. எனவே இந்த விடயத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.