பொது­ஜன பெரமுன நீதி­மன்றம் செல்கிறது

Published By: Priyatharshan

16 Dec, 2017 | 09:14 AM
image

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆறு சபை­க­ளுக்கு தாக்­கல்­ செய்த வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் அக்­கட்சி அடுத்­த­வாரம் உயர்­நீ­தி­மன்றம் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது.

அக­ல­வத்தை, பதுளை, பாணந்­துறை, மஹி­யங்­கனை, மஹ­ர­கம, வெலி­கம ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்­களே நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வேட்பு மனுக்­களில் சிறு சிறு தவ­றுகள் மாத்­திரம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், அதனை உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் பிரகாம் ஏற்­றுக்­கொள்­ள வைப்பதற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பியல் நிஷாந்த தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

களுத்­துறை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்­களில் ஐந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வேட்பு மனுக்­களில் கட்­சியின் பெய­ருக்குப் பதி­லாக கட்­சியின் செய­லாளர் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பெயரே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 

எனினும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தாக்கல் செய்த வேட்பு மனுக்­களில் சிறு தவ­று­களே இடம்­பெற்­றுள்­ளன. அதனை அடிப்­ப­டை­யா­க­கொண்டு வேட்பு மனுக்கள் நிரா­கரிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் வேட்­பு­ம­னுத்­தாக்­கலின் போது ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் கூட்டு எதிர்க்­கட்­சியினருக்கு அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தெடர்பில் நாம் ஒரு போதும் திருப்தியடையப்போவதில்லை. எனவே இது தொடர்பில் நீதிமன்றை நாடி பெற வேண்டிய தீர்ப்பைப் பெறவுள்ளோம். அதன் பின்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி தேர்தலில் வெற்றியடைந்து காட்டுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02