வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும்

Published By: MD.Lucias

16 Dec, 2017 | 09:10 AM
image

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கை முன்­வைக்க  சகல உரி­மையும் உள்­ளது. நீதி­மன்றம் சம்மதம் தெரி­வித்தால் உரிய தொகு­தி­களில் தேர்தல் பிற்­போ­கவும் வாய்ப்­புகள் உள்­ள­தாக மாகா­ண­சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

எனினும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற ஏக­ம­ன­தான ஒத்­து­ழைப்பு உள்­ள­தனால் தேர்­தலில் எந்த சிக்­கலும் வராது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கொழும்பு வெள்­ள­வத்­தையில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் கட்­சி­களை இலக்கு வைத்த ஒன்­றல்ல, மாறாக பிர­தி­நி­தி­களை இலக்­காக கொண்­ட­தாகும். தமது பிர­தே­சங்­களில் மக்­க­ளுக்­காக சேவை செய்யும் உறுப்­பி­னர்­களை மக்­களே தெரி­வு­செய்யும் தேர்தல். இதில் பிர­தான  கட்­சி­களை விளம்­ப­ரப்­ப­டுத்தி அல்­லது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி எதையும் செய்­து­விட முடி­யாது. இறுதி முடிவு மக்­களின் கைகளில் உள்ள நிலையில் அதுவே தீர்­மா­ன­மாகும். மேலும் கடந்த காலங்­களை போலல்லாது சுயா­தீ­ன­மா­கவும் ஜன­நா­யக ரீதி­யி­லுமே தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. ஆகவே மக்­களின் தீர்­மானம் என்ன என்­பது எமக்கு நன்றாகவே தெரியும். 

மேலும் ஒரு குடும்­பத்­திற்கு ஒருவர் என்ற நிலைப்­பாட்டில் அர­சியல் செய்ய வேண்டும் என்­பதே எனது தனிப்­பட்ட நிலைப்­பா­டாகும். குடும்ப அர­சி­ய­லுக்கு அப்பால் மக்கள் பிர­தி­நிகள் மக்­களின் நலன் கரு­தியும் அடுத்த நப­ருக்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் வகை­யிலும் அர­சியல் செயற்­பா­டுகளில் ஈடுபட வேண்டும். எனினும் கடந்த காலங்­களில் அவ்­வாறு இல்­லாது குடும்ப அர­சி­யலே சகல இடங்­க­ளிலும் நில­வின. தந்தை பாரா­ளு­மன்­றத்தில், தாய் மாகா­ண­ச­பையில், பிள்­ளைகள் பிர­தே­ச­ச­பையில் தமக்­கான இடங்­களை தக்க அவைத்­து­கொண்டு அதி­கா­ரங்­களின் மூல­மாக ஆட்சி செய்த காலம் இனி­மேலும் உரு­வாக்­கப்­பட கூடாது. இது­வ­ரையில் அவ்­வாறு குடும்ப அர­சியல் இருந்­ததும் அதைக்­கண்டு அஞ்­சி­யதும் போதும். இது நாட்­டிற்கு பொருந்­தாத ஒன்­றாகும். மக்­களும் அதனை நிரா­க­ரித்து விட்­டனர். 

ஊட­கங்­களும் மக்­க­ளுக்கு சரி­யான தலை­மைத்­துவம் குறித்த தெளி­வு­களை முன்­வைக்க வேண்டும். மக்கள் பக்கம் நின்றே ஊட­கங்கள் செயற்­பட வேண்டும். அதுவே இலங்­கையின் எதிர்­கால  நல­னுக்கு மிகவும் பொருத்­த­மா­ன­தாக அமையும். மேலும் தற்­போது எமது அமைச்­சிற்கு  புதிய இரா­ஜாங்க அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். கடந்த 10  மாதங்­க­ளுக்கும் மேலாக நான் தனி­யாக சகல பொறுப்­புக்­க­ளையும் கையாண்டேன். மிகவும் கடி­ன­மான ஒரு வேலை­யினை நான் முன்­னெ­டுத்தேன். எனினும் இப்­போது தகு­தி­யான ஒரு­வரை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். ஆகவே அவ­ருக்கு அதி­கா­ரங்­களை கொடுத்­து­விட்டு நான் மக்கள் பணி­யினை சரி­யாக செய்ய முடியும் என நம்­பு­கின்றேன். 

மேலும் 93 பிர­தேச சபை­க­ளுக்­கான வேட்­பு­மனு தாக்கல் நேற்­றுடன் (நேற்று முன்­தினம்) முடி­வுக்கு வந்­துள்­ளது. எனினும் இதில் பொது எதி­ரணி உள்­ளிட்ட சில கட்­சி­களின் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பொது எதி­ர­ணியின் வேட்­பு­மனு நிரா­க­ரிப்பு என்­பது ஆச்­ச­ரி­ய­மான ஒரு விடயம் அல்ல. அக்­கட்­சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் பொறுப்­புக்­களை ஏற்­றுக்­கொண்ட போதே  தவ­றுகள் இடம்­பெறும் என்­பது எமக்கு தெரியும். வெறு­மனே புத்­த­கத்தை மட்­டுமே அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­படும் நபரே அவர். ஆகவே அவர்கள் குறித்து சொல்­வ­தற்கு ஒன்றும் இல்லை. எனினும் வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்ட போதிலும் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்றம் சென்று மீண்டும் தமக்­கான வாய்ப்­பு­களை கோர முடியும். நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில்  மீள்­ப­ரி­சீ­ல­னைக்­கான வழக்கு தாக்கல் செய்யும் பட்­சத்தில் நீதி­மன்றம் இது குறித்து தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்கும். எனினும் அவ்­வாறு மீள் பரி­சீ­லனை குறித்து நீதி­மன்றினால் அனு­மதி வழங்­கப்­ப­டு­மாயின் குறித்த தொகு­தியின் தேர்­தல்கள் பிற்­போ­கவும் வாய்ப்­புகள் உள்­ளன. எனினும் இப்­போ­துள்ள நிலையில் சகல தொகு­தி­க­ளிலும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்­டிய நிலைமை உள்­ள­தனால் தேர்தல் பிற்­போக வாய்ப்­புகள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன. எவ்­வாறு இருப்­பினும் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் தமது நியா­ய­மான கோரிக்­கைக்­காக நீதி­மன்றம் செல்ல சகல உரி­மையும் உள்­ளது. அதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. 

அதேபோல் இந்த தேர்தல் குறித்து சில விமர்­ச­னங்­களும் எழுந்­துள்­ளன. குறிப்­பாக அதிக நிதி செலவில் தேர்­தலை நடத்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக கூறு­கின்­றனர். இந்தக் கருத்­தினை நானும் மறுக்­க­வில்லை. காரணாம் என்­ன­வெனில் கடந்த காலங்­களை போல் அல்­லாது மாற்று முறை­மையில் இம்­முறை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. எல்லை நிர்ணயம், சகல தொகுதிக்கும் ஒரே தினத்தில் தேர்தல், சகல கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நலன்களை கருத்தில் கொண்ட மாற்றம், பெண்கள் பிரதிநிதித்துவம் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என்ற காரணத்தினால் கால விரயம், நேர விரயம், பண விரையம் ஏற்படுவதை தடுக்க இயலாது. எனினும் விமர்சனம் முன்வைக்கும் நபர்கள் மறுபுறம் எமது சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32