(ஆர்.ராம்)

ஜனாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தில் எமதுக்கு நம்பிக்கை உள்ளது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவளிப்பதுடன் ஒத்துழைப்புக்களை நல்கும். அயல் நாடுகளில் இலங்கைக்கே முக்கியத்தவத்தை வழங்குகின்றோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபாலவை அவருடை  இல்லத்தில் சந்தித்திருந்தார். 

இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவில் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.