உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொகு­தி உ­டன்­பாடு காணப்­பட்ட இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் ஏனைய பகு­தி­களில் தனித்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி கண்டி, மாத்­தளை மாவட்­டங்­களில்  முதற்­கட்­ட­மாக அறி­விக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளது. 

 

மாத்­தளை மாந­கர சபைக்கும் கண்டி மாவட்­டத்தில் நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கும் ஏணிச்­சின்­னத்தில்  தமிழ் முற்­போக்கு கூட்­டணி  போட்­டி­யி­டு­கின்­றது.  இதற்­கான வேட்­பு­ம­னுக்கள் நேற்­று­முன்­தினம்  தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.  

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  தலை­மை­யி­லான   ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின்  ஏணிச்­சின்­னத்­தி­லேயே  முன்­னணி  தனித்து   போட்­டி­யி­டு­கின்­றது.  இதற்­கேற்­ற­வ­கை­யி­லேயே   மாத்­தளை மாந­க­ர­ச­பைக்கும்   நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கும் வேட்­பு­ம­னுக்கள்  தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.  

இதே­போன்றே கண்டி மாந­க­ர­சபை பன்­வில, உடப்­ப­லாத்த, மஹி­யங்­கனை ஆகிய  சபை­க­ளுக்கும்   ஏணிச்­சின்­னத்­தி­லேயே  தமிழ் முற்­போக்கு கூட்­டணி போட்­டி­யிட உள்­ளது. 

இதே­வேளை  கொழும்பு  மாந­கர சபைக்­கான தேர்­தலில்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து பேச்­சுக்கள் நடத்­தப்­பட்ட போதிலும்   தொகு­திப்­பங்­கீட்டு விட­யத்தில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இதனால்   தனித்­து­வத்தை பேணும்­வ­கையில்  கொழும்பு மாந­க­ர­ச­பையில் ஏணிச்­சின்­னத்தில் கள­மி­றங்­கு­வ­தற்கு  தமிழ்  முற்­போக்கு கூட்­டணி முடிவு செய்­துள்­ளது.  இதற்­கான நட­வ­டிக்­கைகள்   மும்முரமாக இடம்பெற்று  வருகின்றன. 

கடந்த  மாநகரசபை  தேர்தலின்போது  ஜனநாயக மக்கள் முன்னணி தனித்து ஏணிச்சின்னத்தில் போட்டியிட்டு ஆறு உறுப்பினர்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.