வவுனியா வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கைக்கு அருகே இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும்  துவிச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய முதியவரொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய பெண்ணும் அவரது 5 வயதுடைய மகளும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார்  சமுகமளிக்கவில்லை மக்கள் தெரிவித்தனர்.