பாடசாலைச் சீருடை வவுச்சர் வழங்கும் விவகாரத்தில் குளறுபடி செய்யும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உரிய கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி வலயங்கள் சிலவற்றில் வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வவுச்சர்களில் விற்பனை நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட வேண்டிய இடத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முத்திரைகள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற மேலும் சில புகார்கள் குறிப்பிட்ட சில கல்வி வலயங்களில் இருந்து பதிவாகி வருகின்றன. இதையடுத்தே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.