(ஆர்;.ராம்)

இலங்கைக்கு வருகை தந்தமையானது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த விஜயத்தின்போது அனைத்து தரப்பினருடைய கருத்துக்களையும் நிச்சியமாக செவிமடுப்மேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றுக் காலை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

இலங்கைக்கு வருகை தந்தமையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். மிகுந்த ஆவலுடனேயே எனது விஜயம் அமைந்திருக்கின்றது. இதன்போது நான் அரசாங்கத் தரப்பினர் உட்பட பல்வேறுபட்ட தரப்புக்களை சந்திக்கவுள்ளேன். அனைவரினது கருத்துக்களுக்கும் நான் செவிமடும்பேன் என்றார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன்  இலங்கையில் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்யவறுபட்ட நடைமுறைச் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்தொடர்பாக அனைவருடனும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.