தனிமையை தடுப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றின் அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”தனிமை என்பது உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பாதிக்குமொன்றாகும். தனிமை என்பது 15 சிகரெட்டுகளை புகைப்பதனால் ஏற்படும் தீங்கிற்கு சமமானதாகும். தனிமை பிரச்சினையினால் பிரித்தானியாவில் சுமார் 9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்பிரச்சினையை அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக கையாள முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான புதிய தரவுகள் அடுத்த ஆண்டு வெளிப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.