அமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை நேற்று சந்திந்த ரஷ்ய அதிபர் புடின்,

" ரஷ்யா அதன் இராணுவம் மற்றும் கடற்படையை மேலும் பலப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. எனவே அமெரிக்காவுடனான ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை” என்று கூறினார்.

சிரியாவில்  நடைபெற்ற உள் நாட்டுப் போரில் சிரிய அதிபர் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா ராணுவ உதவிகளை வழங்கியதுடன் ராணுவ வீரர்களையும் சிரியாவுக்கு அனுப்பியது.

ரஷ்யாவின் உதவி காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை அதிபர் அசாத் மீட்டுள்ளார்.

இந்  நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்யா தனது படைகளை சிரியாவிலிருந்து திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.