குடிக்க தண்ணீர் கேட்ட மாண­வர்­க­ளுக்கு மது­பானம் கொடுத்த தலைமை ஆசி­ரியர் உட்­பட 3 பேர் பணி­யிடை நீக்கம் செய்­யப்­பட்டு உள்­ளனர்.

கர்­நா­ட­காவில் தும­குரு மாவட்­டத்தில் உள்ள அரச பாட­சாலை   மாண­வர்கள் கடந்த 10ஆம் திகதி தட்­சிண கன்­னடா பகு­தியில் சுற்­று­லா­வுக்கு சென்­றுள்­ளனர்.

சுற்­றுலா முடிந்து திரும்­பிய பொழுது அவர்­களில் களைப்­புடன் இருந்த சில மாண­வர்கள் குடிக்க தண்ணீர் தரும்­படி ஆசி­ரி­யர்­க­ளிடம் கேட்­டுள்­ளனர்.  ஆனால், தண்­ணீ­ருக்கு பதி­லாக மது போதையில் இருந்த ஆசி­ரி­யர்கள் மது­பானம் இருந்த போத்­தல்­களை கொடுத்­துள்­ளனர்.  இதனை அறி­யாமல் வாங்கி குடித்த மாண­வர்­களில் சிலர் வாந்தி எடுத்­துள்­ளனர்.

அந்த மாண­வர்­களின் பெற்றோர் துறை அதி­கா­ரி­க­ளிடம் புகார் தெரி­வித்­துள்­ளனர்.  இதனை தொடர்ந்து பொம்­மல தேவி புரா பகு­தியில் அமைந்த அந்த பாட­சா­லைக்கு சென்ற அதி­கா­ரிகள் விசா­ரணை மேற்­கொண்­டனர்.  இதனை யடுத்து தலைமை ஆசி­ரியர் உட்­பட 3 ஆசி­ரி­யர்கள் பணி­யிடை நீக்கம் செய்­யப்­பட்­டனர்.