ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட  55 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடம் நடத்திய சோதனையில்  ஒரு கிலோகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  அவரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி  சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.