இரு பெண்கள் இளை­ஞ­ரொ­ரு­வ­ருக்கு   துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி  மர்­ம­மான பான­மொன்றை அருந்தக் கொடுத்த பின்னர்  அவரை  பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய விப­ரீத சம்­பவம்  தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

சம்­பவ தினம் லிம்­பொபோ மாகா­ணத்தில் பொலொக்வேன்  எனும் இடத்­தி­லுள்ள வீதியில் பயணம் மேற்­கொள்­வ­தற்­காக  ஏதா­வது வாகனம் வரு­கி­றதா என அந்த இளைஞர் காத்து கொண்­டி­ருந்த போது,  அவ்­வ­ழி­யாக  காரில் வந்த இரு நடுத்­தர வயதுப் பெண்கள் அவ­ருக்கு தமது காரில் பய­ணத்தைத் தொடர உத­வு­வ­தாக தெரி­வித்து அவரை தமது காரில் ஏற்றிக் கொண்­டனர். 

அதன் பின்  அந்தப் பெண்கள் அவரை துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி  மர்­மான பான­மொன்றை அருந்த நிர்ப்­பந்­தித்­துள்­ளனர்.

தொடர்ந்து அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய அந்தப் பெண்கள்  அவரை தஸானீன் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள பிராந்­தி­ய­மொன்றில் கைவிட்டுச் சென்­றுள்­ளனர்.

தற்­போது  மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளை­ஞ­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக பிராந்­திய  பொலிஸ் அதி­கா­ரி­யான மோட்ஷி நகோப்  தெரி­வித்தார்.

தென் ஆபி­ரிக்­காவில் இவ்­வாறு பெண்­களால் ஆணொ­ருவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. கடந்த மே மாதம் 23  வயது  இளைஞர் ஒருவர்  3 பெண்­களைக் கொண்ட குழுவால் கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார். இதன்­போது குறிப்­பிட்ட அந்த இளை­ஞ­ருக்கு மர்­ம­மான சக்­தி­யூட்டும் பானம் வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 அத்­துடன் கடந்த ஜூலை மாதம் சிம்­பாப்­வேயின் சிதுங்­விஸா பிராந்­தி­யத்தில் பாட­சாலை ஆசி­ரி­ய­ரான ஆணொ­ருவர் 3  பெண்­களால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

 ஆபி­ரிக்க  பிராந்­தி­யங்கள் சில­வற்றில்  கவர்ச்­சி­யான  புத்­தி­சா­லித்­த­ன­மான ஆண்­களின் விந்­த­ணுக்கள் மூலம்  கர்ப்பம் தரித்து சிறப்­பான குழந்­தை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற தீவிர நம்பிக்கை நிலவுவதால் அத்தகைய ஆண்களை  பெண்கள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அவர்களது விந்தணுக்களைத் திருடுவதும் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.