நாவலப்பிட்டி  நகர சபை மற்றும் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச சபைக்கான வேட்பு மனுதாக்கலில் நாவலப்பிட்டி  நகர சபைக்கான ஒரு உறுப்பினரின் வேட்பு மனு தவிர்ந்த மற்றைய வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கண்டி பிரதான செயலாளரும் பிரதி தெரிவத்தாட்சி அதிகாரியுமான எஸ்.எம்.பி. ஹிட்டிசேகர  நேற்று தெரிவித்தார்.

மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுதாக்கல் இறுதி தினமான நேற்று வியாழக்கிழமை  இது தொடர்பான ஆட்சேபனைகளுக்கான நேரத்தின் போது சமர் பிக்கப்பட்ட ஒரு வேண்டுகோள் 2017ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டத்தின் 16ஆவது திருத்தத்தின் படி ஏற்றுக் கொள் ளப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதன் படி நாவலப்பிட்டி நகர சபைக்கான 2ஆம் இலக்க வட்டாரமான கொன்தென்னாவ வட்டாரத்தின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான காரியவசம் பதிதரனகே கெமுனு சுமதிபாலவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,-

இன்று 6கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்ததாகவும் அதில் சுயேட்சை குழுக்கள் எதுவுமில்லை என்றும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எகமுத்து பிரகதசீலி பெரமுன மற்றும் ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் எனத் தெரிவித்தார்.