கண்டி, கலஹா பொலிஸ் பிரிவில் வெள்ளைச் சந்தன மரக்கட்டைகள் 57 கிலோவைப் பதுக்கி வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வெள்ளைச் சந்தன மரத்துண்டங்களை சிறிய துண்டுகளாக வெட்டி பொதி செய்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில், அவரை கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளின் பெறுமதி கணிக்கப்பட வில்லை என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.