கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் ஒன்று கணடெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் 29 வயதுடைய ஆணொருவருடையதென கட்டுகஸ்தோட்டை பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த சடலம் உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் பாலம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவ் விடத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இப் பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் தவ்பீக் மொஹமட் தில்ஷான் என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என இனம் காணப்பட்டுள்ளார்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.