(எம்.டி.லூசியஸ், எம். மின்ஹாஜ், க. கிஷாந்தன்)

மலை­யகம் என்­றாலே மனதில் உத­ய­மா­வது இயற்­கையின் அழகு. ஆனால் அம் மக்­களின் வாழ்வோ இன்­னமும் துன்பம் ஏமாற்றம் நிறைந்­த­தாகும். அவ்­வாறு பல துய­ரங்­களை சுமை­யாகக் கொண்டு வாழும் அப்­பாவி மக்­களை பல ஏமாற்றுப்பேர்­வ­ழிகள் சக­லது­றை­க­ளிலும் ஏமாற்றிக்கொண்­டி­ருக்­கின்­றனர். அதில் ஒன்­றா­கவே அச் சமூ­கத்தில் முக்­கிய பிரச்­சி­னை­யாக சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக வியா­பாரம் உரு­வெ­டுத்­துள்­ளது.

இந்­தியா, இஸ்ரேல், உக்ரைன் உட்­பட பல நாடு­க­ளி­லி­ருந்தும் சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்­வ­தற் குப் பலரும் இலங்­கைக்குப் படை­யெ­டுத்­து­வரும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

இதனால், தெற்­கா­சி­யாவில் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாகத் திகழும் இலங்கை, தற்­போது சிறு­நீ­ரக கொள்­ளை­யர்­களின் குகை­யாக மாறி­வ­ரு­கி­றது. இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பல தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

வறிய மக்­களைக் குறி­வைத்தே சிறு­நீ­ரக வேட்டை அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­கி­றது. அதிலும் குறிப்­பாக, மலை­ய­கத்தில் வாழும் தோட்டத் தொழி­லா­ளர்­களை மையப்­ப­டுத்­தியே வலை வீசப்­ப­டு­கி­றது என்று புல­னாய்­வுப்­பி­ரி­வுக்குத் தகவல் கிடைத்­துள்­ளது என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்றி சட்­ட­வி­ரோ­த­மாக சிறு­நீ­ரகம் பறிக்­கப்­ப­டு­கின்­றது என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ர் இரா­தா­கி­ருஷ்­ணனும் தகவல் வெளி­யிட்­டி­ருந்தார்.

2012ஆம் ஆண்டு இலங்­கையில் இடம்­பெற்ற சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக பரி­மாற்று நட­வ­டிக்கை தொடர்பில் இஸ்­ரேலின் முன்னாள் இரா­ணுவ சிப்பாய் ஒருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார் என்று சர்­வ­தேச செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக வணி­கத்தில் ஈடு­பட்ட மேலும் சிலர் இந்­தி­யாவில் மடக்­கிப்­பி­டிக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில், இலங்­கை­யிலும் பல வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக வேட்டை அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­கி­றது என்­ப­தற்­கு­ரிய ஆரம்­பக்­கட்ட தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­ வதால் இலங்­கையில் இது­வ­ரை­கா­லமும் இவ்­வி­டயம் பெரி­தாகப் பேசப்­ப­ட­வில்லை. தக­வல்­களும் அம்பல­மா­க­வில்லை. தற்­போது இது குறித்த இர­க­சியத் தக­வல்கள் கசியத் தொடங்­கி­யுள்­ளன.

இதை­ய­டுத்தே தேடுதல் வேட்­டையும் விசா­ர­ணை­களும் பொலி­ஸாரால் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வியும் கோரப்­பட்­டுள்­ளது. இதன் பிர­தி­ப­ல­னாக இலங்­கையின் வைத்­தி­யர்கள் அறு­வ­ருக்கு எதி­ராக இந்­தி­யாவில் வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்ளது.

மோசடி வலையில் சிக்­கி­ய­வர்கள்

இந்நிலையில் மலையகத்தில் சிறுநீரக மோசடி வலையில் சிக்கியவர்களின் தொடர் பிலான எமது தேடுதல் ஹட்டன் - தலவாக்கலை பகுதியை மையப்படுத்தியதாக இருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை நாம் அனுகிய போது, அவரின் விழி­களில் விழிநீர் பெருக்­கெ­டுக்கத் துவங்­கி­யது. விம்மி அழு­த­ப­டியே தன்னை சுதா­க­ரித்­துக்­கொள்­வ­தற்­காக சாரத்தால் முகத்தை துடைத்­துக்­கொண்டு, தனக்கு நேர்ந்த அவ­லத்தை விவ­ரிக்கத் தொடங்­கினார் 53 வயதுடைய கந்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

""ஒன்­னரை லெட்சம் தாரேனு சொன்­னா ங்க. ஆனா, பத்து ஆயிரம் தான் கொடுத்­தாங்க என்றார். கண்­ணீ­ருக்கு அவரால் அணை­போட முடி­ய­வில்லை.

"" நான் பங்­களா ஒன்­னுல வேலை செஞ் சேன். கிட்னி கொடுத்தா சல்லி குடுப்­பாங்­ கன்னு என்­னோட அந்த பங்­க­ளா­வுல வேலை செஞ்ச பொடியன் சொன்னான். மொதல்ல நான் விரும்­பல்ல. எனக்கு நாலு புள்­ளைங்க இருக்­காங்க. வறுமை கார­ண­மா­கத்தான் அதை குடுக்க சம்­ம­திச்சேன். என்­னோட கிட்­­னிய யாருக்கு குடுத்­தாங்­கன்­னு­கூட எனக்குத் தெரி­யாது."

இப்­படிப் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போதே மறு­ப­டியும் அழு­வ­தற்கு ஆரம்­பித்தார் கந்தன்.

வலது கையில் எப்­பொ­ழுதும் இரும்­புக்­கம்­பி­யொன்றை ஏந்­தி­யுள்ளார். தனக்கு வலிப்பு வரும் என்­ப­தால்தான் இப்­படி வைத்­துள்ளார் என்று கூறினார். சிறு­நீ­ர­கத்தை வழங்­கிய பின்­னரே தனக்கு இவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்­டது என்றும் அவர் குறிப்­பிட்டார். தான் எந்த வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து வரப்­பட் டார். யாருக்கு சிறு­நீ­ரகம் வழங்­கப்­பட்­டது என்ற விவரம் எது­வுமே அவ­ருக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

வெற்­றிலை வாங்­கு­வ­தற்­காக 20 ரூபா தரு­மாறு அழுத குரலில் எம்­மிடம் கேட்ட அவ­ருக்கு சிறுநீரகம் பல இலட்­சங்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வது தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை. விவரம் அறியா இவர்­களைப் போலுள்­ள­வர்­களை நன்கு விவரம் அறிந்­த­வர்­களே திட்­ட­மிட்டு ஏமாற்­று­கி­றார்கள்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்தில் பணத்­துக்கு ஆசைப்­பட்டு தனது சிறு­நீ­ர­கத்தைப் பறி­கொ­டுத்த மற்­று­மொரு இளைஞன் முத்துசாமி. (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). தல­வாக்­க­லை­யி­லுள்ள எபோஸ்ட்லி தோட்­டத்தில் வசித்­து­வ­ரு­கிறார். 5 இலட்சம் ரூபா வழங்­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட பின்னர் தமது சிறு­நீ­ர­கங்­களுள் ஒன்றை வழங்­கு­வ­தற்கு அவர் இணங்­கி­யுள்ளார்.

கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் சிகிச்சை பெற்­று­வந்த நபர் ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ரகம் வழங்­கு­வ­தற்­கா­கவே 2014 ஆம் ஆண்டு அவர் கொழும்பு வந்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த 41 வய­து­டைய நபர் ஒரு­வ­ருக்கே தனது சிறு­நீ­ரகம் வழங்­கப்­பட்­டது என்றும், குறிப்­பிட்ட நப­ரது உற­வினர் என்று தன்னை வைத்­தி­ய­சா­லையில் அறி­மு­கப்­ப­டுத்­தியே சிறு­நீ­ரகம் பெறப்­பட்­டது என்றும் கூறினார்.

எனினும், சிறு­நீ­ரகம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர் அவர் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் ஏமாற்­றப்­பட்­டுள்ளார். உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட தொகை அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. பணம் தரு­வ­தாகக் கூறி­யவர் நாட்­டை­விட்டுத் தப்­பிச்­சென்­றுள்ளார்.

சம்­பந்­தப்­பட்ட நபர்­களை தொலை­பேசி ஊடாக தொடர்­பு­கொண்டார் என்றும், அப்­போ­துதான் போலி இலக்கம் வழங்­கப்­பட்­டுள்ள விடயம் தனக்குத் தெரி­ய­வந்­தது என்றும் தனக்கு நேர்ந்த அவ­லத்தை எம்­மிடம் விவ­ரித்தார் முத்துசாமி. இவரும் கந்­த­னைப்­போன்றே குடும்ப வறுமை கார­ண­மா­கவே பணத்­துக்கு ஆசைப்­பட்டு சிறு­நீ­ர­கத்தை வழங்­கி­யுள்ளார்.

இவ்­வாறு சீறு­நீ­ரகம் வழங்­கப்­பட்­டதும் நான் ஏமாந்­ததும் எப்­ப­டியோ வெளியே தெரி­ய­வந்­ததால் தனது நண்­பர்­களும் தன்னை கேலி செய்­வதால் வாழ்க்கை அவ­மா­ன­மாக இருக்­கி­றது என்­கிறார் முத்துசாமி.

சிறு­நீ­ர­கத்தை வழங்­கிய பின்னர் கடி­ன­மான எந்­த­வொரு தொழி­லிலும் ஈடு­ப­ட­மு­டி­யாத துர­திர்ஷ்ட நிலைக்கு இவர் தள்­ளப்­பட்­டதால் கொழும்­பி­லுள்ள வீடொன்றில் இலகு வேலை­களைச் செய்து வாழ்க்­கையை ஓட்­டிக்­கொண்­டி­ருக்­கிறார்.

இந்தச் சிறு­நீ­ரக மாற்று சிகிச்­சையில் சம்­பந்­தப்­பட்ட வைத்­தி­யர்கள் மனி­தா­பி­மான ரீதியில் வைத்­திய தர்­மங்­க­ளுடன் சிறு­நீ­ர­கத்தை வழ ங்­கி­ய­வரின் ஆரோக்­கி­யத்­திலும் கவனம் செலுத்­தி­யி­ருக்க வேண்டும். அதுவும் நடை­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை. விவரம் அறியா அப்­பா­வி­களை ஏமாற்­றி­ய­துடன், அவர்­களின் உடல் ஆரோக்­கி­யமும் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. இது முற்­று­மு­ழு­தான ஒரு மனித உரிமை மீறல்.

விவ­ர­மற்­ற­வர்­களை நாடி ஏமாற்றும் இடைத்­த­ர­கர்கள் பிச்­சைக்­கா­ரர்­க­ளையும் விட்­டு­வைக்­க­வில்லை.

பிச்­சைக்­கா­ர­னையும் விட்­டு­வைக்­காத சிறுநீ­ரக வியா­பா­ரிகள்

தல­வாக்­க­லையில் யாசகம் செய்யும் பல­ரையும் இந்த சிறுநீரக வியா­பார இடைத்­த­ர­கர்கள் தொடர்பு கொண்­டுள்­ளனர்.

இப்­படி மூன்றாம் தரப்­பினர் ஊடாக தல­வாக்­கலை பகு­தியில் பல­ரிடம் சிறு­நீ­ரகம் வழங்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. நாம் சந்­தித்த நபர்கள் சிலர் இதை ஒப்­புக்­கொண்­டனர். எனினும், மேல­திக தக­வல்­களை வெளி­யி­டு­வ­தற்கு அவர்கள் தயக்கம் காட்­டினர்.

சிறு­நீ­ரக வணி­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் சுமார் 30 இலட்சம் ரூபா­வரை பணம் பெறு­கின்­றனர் என்றும், வழங்­கு­ப­வ­ருக்கு இதி­லி­ருந்து 5 இல ட்சம் ரூபா­வ­ரைதான் வழங்­கப்­ப­டு­கின்­றன என் றும் விட­ய­ம­றிந்­த­வர்கள் தெரி­வித்­தனர். இச்­செயல் சட்­டத்­திற்கு முர­ணாக இருப்­பினும், பணத்­திற்­கா­கவே இதில் ஈடு­பட்­ட­தாகக் கூறும் இந்த நபர்கள், உடல் உபா­தையைத் தவிர வேறு எதை­யுமே பெற­வில்லை

வைத்­தியர் பிரபாஷ்

""ஹட்டன் பிர­தே­சத்­திலும், அதனை அண்­மித்த பகு­தி­க­ளிலும் பணத்­திற்­காக சிறு­நீ­ரகம் விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்று தல­வாக்­கலை லிந்­துலை வைத்­தி­ய­சா­லையின் மருத்­துவர் பிர பாஷ் கரு­ணா­நா­யக்க உறு­திப்­ப­டுத்­தினார்.

சிறு­நீ­ர­கத்தைப் பணத்­துக்கு விற்­பனை செய்யத் தயா­ரான பெயர் குறிப்­பிட விரும்­பாத மூவர் என்­னிடம் வந்து ஆலோ­சனை கோரினர் என்று தெரி­வித்த மருத்­துவர், அவ்­வாறு செய்­வதால் பின்­வி­ளை­வுகள் ஏற்­ப­டுமா என வின­வினர். விட­யத்தை விளங்­கப்­ப­டுத்­தினேன். பணத்­திற்கு சிறு­நீ­ர­கத்தை விற்­பனை செய்­வது சட்டவிரோதம் என்றும் அவர்­க­ளுக்கு கூறினேன். விற்­ப­வர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­ய­தா­கவும் கூறினார்.

தமிழ் இளை­ஞர்­களே அதிக ஆர்வம்

சிறு­நீ­ர­கத்தை விற்­பனை செய்­வதில் சிங்­க­ள­வர்­களை விடவும், தமிழ் இளை­ஞர்­களே அதிக ஆர்வம் காட்­டி­வ­ரு­கின்­றனர் என்றும் மருத்­துவர் மேலும் தெரி­வித்தார்.

புல­னாய்வு விசா­ர­ணைகள் ஆரம்பம்

சிறு­நீ­ரக வியா­பாரம் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­ற­போ­திலும், அவை பற்­றிய எந்­த­வொரு முறைப்­பா­டு­களும் தமக்குக் கிடைக்­க­வில்லை என்று லிந்­துலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார். இது தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்தும் பணி யில் புல­னாய்வுப் பிரி­வி­னரை கள­மி­றக்கி இருக்­கின்­றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எனினும், அர­சாங்கம் இது­பற்றி உட­னடிக் கவனம் செலுத்த வேண்டும் என்­ப­தோடு, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தக­வல்­களை இர­க­சி­ய­மாகப் பேணு­வ­தற் கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலை­வ­ரான கண­பதி கன­கராஜ் தெரி­வித்தார்.

இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கான சட்டத் தேவைகள் தற்­போது எழுந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். மத்­திய அரசின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இந்த விடயம் தொடர்பில் மத்­திய மாகாண சபையில் ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணை­யொன்றை தான் கொண்­டு­வ­ர­வுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

பெண்­களை நாடு­வது குறைவு

சிறு­நீ­ரக வியா­பாரம் தொடர்பில் மலை­ய கப் பகு­தி­களில் ஆண்­களே குறி­வைக்­கப்­ப­டு­ கின்­றனர். பெண்­களை எவரும் பெரி­தாக நாடு­வ­தில்­லைபோல் தெரி­கி­றது. நாம் பல பெண்­க­ளிடம் விசா­ரித்தோம். எவ­ருமே தம்மை அணு­க­வில்லை என்று குறிப்­பிட்­டனர். இதனை பெயர் குறிப்­பிட விரும்­பாத மகளிர் அமைப்பின் பிர தி­நி­தி­யொ­ரு­வரும் எம்­மிடம் உறு­திப்­ப­டுத்­தினார்.

பெருந்­தோட்­டத்­து­றை­யில்தான் பொரு­ளா­ தா­ரத்தில் பின்­தங்­கிய நிலையில் அப்­பாவி மக்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர். பண ஆசை யைக் காட்டி இவர்­களை ஏமாற்றி சிறு­நீ­ர­கங்­களைப் பெற்­றுக்­கொள்­கின்­றனர் என்று தெரி­வித்தார் சுகா­தார சேவைகள் தொழிற்­சங்­கத் தின் தலைவர் சமன் ரத்­ன­பி­ரிய. இதன் பின்­ன­ணியில் அர­சியல் இருக்­கலாம் என்ற சந்­தே­கத்­தையும் அவர் முன்­வைத்தார்.

சட்­டத்தில் சிறுநீரக வியா­பாரம்

இந்­தி­யாவில் சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக விநி­யோ கம் உச்­சத்தைத் தொட்­டதால் அந்­நாடு புதிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யது. உற­வி­னர்­க ளைத் தவிர வேறு எவ­ருக்கும் சிறுநீரகம் வழங்­க­மு­டி­யாது என்ற ஷரத்து உள்­ள­டக்­கப்­பட்­டது.

ஆனால், இலங்­கையில் அந்த நிலைமை இல்லை என்று சுட்­டிக்­காட்­டினார் சட்­டத்­த­ரணி சேனக பெரேரா. பணத்தை மையப்­ப­டுத்தி சிறு­நீ­ர­கத்தை வழங்­கு­ப­வரும், வாங்­கு­ப­வரும் என இரு­வ­ருமே குற்­ற­வா­ளி­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர் என்றும் அவர் கூறினார்.

உடல் உறுப்­பு­களைப் பணத்­துக்கு விற்­பனை செய்­வது சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை என்­பது பல­ருக்குத் தெரி­யா­துள்­ளது. குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையில் 2006ஆம் ஆண்டு திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதன்­படி ஒருவர் தனது உடல் உறுப்­பு­களைப் பணம்­பெறும் நோக்கில் விற்­பனை செய்­வது குற்­ற­மாகும். இதற்­காக ஏழு வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதி க்க முடியும். இவர்­க­ளுக்கு சட்ட உத­வி­களும் வழங்­கப்­ப­டாது என்று இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யா­ளர்­களுள் ஒரு­வ­ரான பிர­தீபா மஹா­நாம ஹேவா விளக்­க­ம­ளித்தார்.

சட்ட ஆலோ­சனை

இந்­நி­லையில், "சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக வியா­பாரம் தொடர்பில் கொழும்பு குற்­றப்­பு­ல­னாவுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது" என்று பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரு­மான ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

அதே­வேளை, சுகா­தார அமைச்சால் சிறு­நீ­ரக வியாபாரம் தொடர்பில் விசாரணை நட த்த நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு தமது அறிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை சுகா தார அமைச்சரிடம் கையளித்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மலைய கத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சிறுநீரக வியாபாரம் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்கிரம தெரிவித்தார்.

இவ்வாறு அப்பாவி மக்களை ஏமாற்றி சூறையாடப்படும் சிறுநீரக வியாபாரத்தை உடனடியாக இல்லாதொழிக்கவும் இது தொடர்பில் அதிகாரிகள் தமது கவனத்தை செலுத்தவும் வேண்டும். வெறுமனே இங்கு பிரச்சினை உள்ளது என ஊடகங்களின் முன் தெரிவிப்பதை விட இந்தப் பிரச்சினைக்கு இவ்வாறு ஒரு தீர்வைக் கண்டுள்ளோம் என கூறுவது சிறப்பானதாகும். உடல் உறு ப்புகளைப் பணத்துக்கு விற்பனை செய்ப வரும் பெறுபவரும் குற்றவாளிகளே. தமது வறுமையை அடிப்படையாகக் கொண்டு சிறு நீரகங்களை விற்பனை செய்தால் சட்டத்தின் முன் விற்பனை செய்பவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனவே இதை அரியாத மலையகத்தின் அப்பாவி மக்கள் தொடர்பில் அச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அர சியல்வாதிகள், அதிகாரிகள் அக்கறையுடன் செயற்படவேண்டும்.