உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கை மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டன.

வெலிகம, மஹரகம, பாணதுறை ஆகிய நகர சபைகள், அகலவத்த, பதுளை, மஹியங்கனை பிரதேச சபைகள் ஆகியனவற்றில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி, இந்த நிராகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தது.