நடிகர் சங்கத்தின் பதவிக்கு நான் இனி போட்டியிடப்போவதில்லை என நடிகர் சங்கத்தின் முன்னாள்  தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் சரத்குமார் சில தினங்களுக்கு முன் ASK  என்ற பெயரிலான செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ரசிகர்களிடம் நேரடியாக பேசவும், தன்னுடைய கருத்துகளை தெரிவிக்கவும் முடியும்.

இந்நிலையில் ஒருவர்  நடிகர் சங்கத்தின் பதவிக்காக நீங்கள் மீண்டும் போட்டியிடுவீர்களா ?என்ற கேட்டபோது, போட்டியிடமாட்டேன். ஆனால் நடிகர் சங்கத்திற்கு எம்மாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன். அதேபோல் பிரச்சினை ஏதேனும் இருந்தால், அதற்காக அழைத்தால் போய் எம்முடைய கருத்தை சொல்வேன்.’ என்று பதிலளித்திருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்