கிரிக்கெட் உலகின் பெருமரியாதைக்குரிய தொடராகக் கருதப்படும் ஆஷஸ் தொடரில் ஆட்ட நிர்ணயம் நடக்கவிருந்தது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்தின் ‘த சன்’ பத்திரிகையே இத்தகவலை வீடியோ ஆதாரத்துடன் வெளியாக்கியுள்ளது. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இரண்டு ‘புக்கி’களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஓவரில் இத்தனை ஓட்டங்கள் பெறப்படும் என்று வீரர்கள் சமிக்ஞை செய்வதைத் தொடர்ந்து பந்தயப் பணம் கட்டப்படும் என்றும் தாம் தயாராக இருப்பதை வீரர்கள் கையுறைகளை மாற்றி சமிக்ஞை செய்வர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பிரபல வீரர் ஒருவர் உட்பட அவ்வணியின் சில வீரர்களுக்கு இந்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.