இந்தியா, இராமநாதபுரம் அருகே தெய்வ சிலை கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை இந்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருவாடானை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி மதுரை வியபாரி ஒரு வருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியின் உத்தரவின் பேரில் திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து  திருவாடானை தொண்டி ரோட்டில் அச்சங்குடி அருகே நின்ற நானோ ரக காரை சோதனை சென்ற போது, கார் வேகமாக சென்றது.

இதனை தொடர்ந்து காரை விரட்டிபிடித்து  விசாரித்த போது வாகனத்தில் ஒன்றேமுக்கால் உயரமுள்ள ஐம்பொன் விநாயகர் சிலையை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் முக்கிய குற்றவாளியான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த  தங்கபாண்டியன், இவருக்கு சிலைக்கடத்தலில் நெட்வொர்க் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார்,  வெள்ளையபுரத்தை சேர்ந்த செய்யது அப் தாகிர் , ரிஸ்வான், அம்ஜத்கான் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிலையின் மதிப்பு ரூபா 3 கோடி இருக்கும் எனத் தெரிவித்த பொலிஸார். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலை எங்கு இருந்து  எடுக்கப்பட்டது. எந்த காலத்து சிலை என்பது  குறித்து தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.