அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின்   மகன்   மகிஷன் ஞான­சே­கரன்   சமூ­க­நல  செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும்   மகிஷன் ஞான­சே­கரன்  தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார்.

2016 ஆகஸ்ட் மாதம்  அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை  மாண­வ­ராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்­யப்­பட்டு அம்­மா­நி­லத்தின் பிர­தி­நி­தி­யாக அமெ­ரிக்க தலை­நகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்­துள்ள வெள்ளை மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு அங்கு ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்த மகிஷன் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி   பராக் ஒபாமா, உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள், சட்ட சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை நேர­டி­யாக சந்­தித்து மாணவ தலை­மைத்­துவம், சமூ­க­நல செயற்­பா­டு­களில் மாண­வர்­களின் பங்­க­ளிப்பு போன்ற பல முக்­கிய விட­யங்­க­ளைப்­பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  சமூ­கப்­பணி  தொடர்­பான செயல்­முறைப் பயிற்சி  மற்றும் பொது­வாழ்வில் ஈடு­பட்டு சமூ­கப்­ப­ணி­யாற்ற விரும்பும் இளை­ஞர்கள் இந்த வாய்ப்­பினைப் பெறு­வது மிகவும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யாகும். அமெ­ரிக்க நாட்டின் எதிர்­காலத் தலை­வர்கள் என்ற அளவில் இந்த இளை­ஞர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.  இந் நிகழ்­வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். இந்­நி­கழ்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த பெரு­மையும்  அங்­கீ­கா­ரமும்  ஆகும். 

இத்­த­கு­தியை மகிஷன் அடை­வ­தற்குக் காரணம்  நடு­நிலை கல்வி நாட்­களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்­டிய சமூ­க­நல அக்­கறை கொண்ட பல செயல்­களும் பணி­க­ளு­மாகும். இவை­யாவும் படிப்­ப­டி­யாக  இவரை உயர்த்தி வந்­துள்­ளது. பத்து வயதில் வானியல் வல்­லு­ந­ராகப் பணி­யாற்­று­வதில் ஆர்வம் கொண்ட மகி­ஷனின் நோக்கம் பிற்­கா­லத்தில் ஒரு கோளையோ, விண்­கற்­க­ளையோ கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று துவங்­கி­யது.  நூலகம் ஒன்று நடத்­திய வாசிப்பு போட்­டியில் பங்­கு­பற்றி,   மூன்று மாத காலத்­தினுள் நூல­கத்தின் 1,000 புத்­த­கங்­களைப்  படித்­த­மைக்­காக நகர ஆட்­சி­யா­ள­ரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்­பு­வித்­த­மைக்­காக தங்­கப்­ப­தக்­கமும்   மற்றும்   மூன்று “உச்­ச­ரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்­டி­களில் பரி­சுகள் என்று கல்­விக்­கான தகு­தி­களை வளர்த்துக் கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­களை தன­தாக்கிக் கொண்டார்.

சிறு வய­தி­லி­ருந்து தனக்கு  உத­விய  பொது  நூலகம் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றையால் நிதி­யின்றி மூடப்­பட்ட பொழுது அது ‘மனி­த ­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம்’ என மிகவும் இள­வ­ய­தி­லேயே தனது கருத்தைத் தயக்­க­மின்றிப் பதிவு செய்­தவர் மகிஷன். 

(தொடர்ச்சி 8ஆம் பக்கம்)