நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ளிக்கின்றது என யாழ். நகரில்அமைந்­துள்ள நாக­வி­கா­ரையில் புத்­த­பெ­ரு­மானின் வழி­பாட்­டைய­டுத்து வட­மா­காண முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் ஆரி­ய­குள சந்­தி­யி­லுள்ள நாக விகா­ரைக்கு சென்று புத்­த­பெ­ருமான் வழி­பாட்­டை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையின் 68ஆவது சுதந்­தி­ர­தினம் நேற்று முன்­தினம் கொழும்பில் கொண்­டா­டப்­பட்­ட­போது தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டி­ருந்­தது.

இச்­செ­யற்­பா­ட­னது சிறிய விட­ய­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களை பொறுத்­த­வரை ஒரு மகிழ்ச்­சி­யான அவர்­க­ளுக்கு பிடித்­த­மான விட­ய­மாகும். அத்­துடன் அத்­த­கைய செயற்­பாடு என்­னையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. என் மனதில் ஏற்ப்­பட்ட மகிழ்ச்­சியை எடுத்­து­காட்டும் வித­மா­கவே நாக­வி­கா­ரைக்கு வந்து புத்­த­பெ­ருமான் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தேன்.

நாக­வி­கா­ரைக்குச் சென்று புத்த பெரு­மானை வழி­பட வேண்டும் என பல­முறை முயற்­சித்­தி­ருந்த போதும் ஏதோ­வொரு கார­ணங்­களால் அது நடை­பெ­றா­மலே தடைப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்று இரத்து செய்­யப்­பட்­டதால் எனக்கு வழி­பட வாய்ப்புக் கிடைத்­தி­ருந்­தது.

புத்த பெரு­மா­னு­டைய அன்பும் கரு­னையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்­ற­டைய வேண்டும். நாட்டில் புதி­ய­தொரு யுகம் பிறந்து சாந்தி சமா­தானம் நிலவ வேண்டும் என நான் புத்­த­பெ­ரு­மா­னிடம் வேண்­டிக்­கொண்டோன் என்றார்.

மேலும் சுதந்­திர தினத்தில் முன்­மா­தி­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.