நாட்டில் பரவலாகத் தற்போது பெய்து வரும் மழை, அடுத்த 36 மணிநேரத்துக்குத் தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் பிற்பகல் இரண்டு மணியளவில் இடியுடன் மழை பெய்யலாம் என்றும் தென்மேற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை உட்பட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, நாடு முழுவதும் காலை நேரங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகக் காணப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.