இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது  208 ஓட்டங்களயும் தவான் 68 ஓட்டங்களையும் ஐயர்  88 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றவேண்டுமாக இருந்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 393 ஓட்டங்களைப் பெறவேணடும்.