வாழைப்பழம் சாப்பிட்டதற்கு எகிப்து பாப் இசை பாடகிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Published By: Digital Desk 7

13 Dec, 2017 | 02:18 PM
image

எகிப்து பாடகி ஷாய்மா அகமது மியூசிக் வீடியோ ஒன்றில் அநாகரிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல நடித்ததால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் வெளிட்ட ஒரு மியூசிக் வீடியோவில்  வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது வரும் பாடலின் வரியும் ஆபாசத்தை தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பாடகி ஷ்யாமா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று எகிப்து நீதிமன்றம் ஷாய்மா அகமது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்