மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

Published By: Priyatharshan

13 Dec, 2017 | 01:40 PM
image

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று 13.12.2017 அன்று பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 13.12.2017 இன்று காலை 8.00 மணியளவில் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டர் சைக்கிளில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், மோட்டர் சைக்கிள் பிரதான வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் அவ்வழியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கண்டு குறித்த நபரை கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் பூண்டுலோயா நகரப்பகுதியை சேர்ந்த கே.வி.ஜீ. அஜந்த குமார இந்துநில் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47