இந்திய அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் முக்கியமானதுமான போட்டி இன்று சந்திகரில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணி சார்பில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பதுடன் இந்திய அணியில் குல்தீப் யாதவ்விற்கு பதிலாக வொஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.