யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டு­வந்த டில்லு எனப்­படும் குழு­வி­ன­ருக்கு நீதிவான் நீதி­மன்றால் வழங்­கப்­பட்ட தண்­டனை சரி­யா­னது என்றும் அவர்­க­ளது மேன்­மு­றை­யீட்டு மனுவை நிரா­க­ரிப்­ப­தா­கவும் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ். மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒரு­வரை வாளால் வெட்­டிய குற்­றச்­சாட்டில் ஐந்து ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ ணையை தொடர்ந்து குற்றம் நிரூ­பிக்­கப்பட்ட 8 பேருக்கு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதிமன்றம் தண்­டனை தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

இதன்­படி சத்­தி­ய­நாதன் அன்­ரனிஸ் அல்லது டில்லு, அர­விந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்­திரன் கலிஸ் ரன் ஆகி­யோ­ருக்கு 3 ஆண்டுகள் கடூ­ழியச் சிறைத்தண்­ட­னையும் விஜ­ய­ரத்­தினம் ஜனுசன், ஜெக­தீஸ்­வரன் டிரெக்ஸ்­காந்தன், அருந்­த­வராஜ் செந்­தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபி­ரகாம், தேவ­ராசா ஹரிசன் ஆகி­யோ­ருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்­ட­னையும் விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன், பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு 8 குற்­ற­வா­ளி­களும் 50 ஆயிரம் ரூபா இழப்­பீடு வழங்­க­வேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் ஓர் ஆண்டுகால சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்­க­வேண்டும் எனவும் யாழ்ப்­பாணம் நீதி­மன்ற நீதி வான் சி.சதீஸ்­தரன் தீர்ப்­ப­ளித்­தி­ருந்தார்.

இவ் நீதிவான் நீதி­மன்ற தீர்ப்பை ஆட்­சே­பித்து குற்­ற­வா­ளிகள் 8 பேர் சார்­பிலும் அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணிகள் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் மேன்­மு­றையீடு செய்­தி­ருந்­தனர். மனு மீதான விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வந்த நிலையில் ரட்­ண­சிங்கம் ஜனுசன் மற்றும் பெனடிக்ற் வெஸ்லி ஏபி­ரகாம் ஆகியோர் சார்பில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் பிணை விண்ணப்பம் செய்தார். அத­ன­டிப்­ப­டையில் மேன்­மு­றை­யீட்டுமனு விசா­ரணை நிறை­வ­டை­யும்­வ­ரையில் அவர்கள் இரு­வ­ருக்கும் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றம் பிணை வழங்­கி­யது.

இந்த நிலையில் 8 பேரின் மேன்­மு­றை­யீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றம் நேற்­றைய தினம் வழங்­கி­யி­ருந்­தது. "மேன்­மு­றை­யீட்­டா­ளர்­களால் நீதிவான் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பி­லுள்ள சட்டம், நிகழ்வுத் தவ­றுகள் எண்­பிக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டிய நீதி­ப­தி ­யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்றால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு நியா­ய­மா­னது என குறிப்­பிட்டார்.

இதன்­படி குற்­ற­வா­ளி­க­ளிடம் தண்டம் அற­வீடு செய்­வது அவ­சி­ய­மா­னது, எனினும் நீதிவான் மன்றால் அது கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எனவே, 8 சந்­தே­க­ந­பர்­களும் தலா ஆயி­ரத்து 500 ரூபா தண்டப் பணத்தை நீதிவான் மன்றில் செலுத்­த­வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாதம் சாதா­ரண சிறைத் தண்­ட­னையை அனு­ப­ விக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் மேன்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கப் பட்டதால் மேல் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட இருவரினதும் தண்டனைக்காலம் இன்று ஆரம்பமாவதை நீதிவான் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப் பிட்டிருந்தார்.