தமது கட்­டுப்­பாட்­டுக்குள் நாம் தொடர்ந் தும் இருக்க வேண்டும் என்று மத்­திய அர­ சாங்கம் விரும்­பு­கின்­றது. அதி­காரப் பகிர்­வு­கூட பெரும்­பான்­மை­யி­னரின் பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் இருந்­து­ கொண்டே எம்மால் அனு­ப­விக்­கப்­பட வேண்டும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது என்று வட­ மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

எமக்கு எமது மக்­களின் வருங்­கா­லமே முக்­கி­ய­மாகும். பணம் வந்தால் போதும் என்ற அடிப்­ப­டையில் நன்­மை­களைப் பெறு­வதில் நாம் ஏற்­க­ம­றுக்­கின்றோம். வரு­மா­னமே வரப்­பி­ர­சாதம் என்ற கொள்கை எமது வாழ்க்கை முறையை மாற்­றி­விடும். தனித்­து­வத்தைப் பாதித்­து­விடும். நாங்கள் மாகாண ரீதி­யாக பெரும்­பான்­மை­யி­னரின் ஒரு அல­கா­கி­வி­டுவோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வட­மா­காண சபையின் வரவு செலவுத் திட்­டத்­தினை சமர்ப்­பித்து நேற்று உரை­யாற்­றி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

எமது அபி­வி­ருத்­தியைப் பற்றிப் பேசும் போது பலர் வரு­மா­னந்­தரும் பாரிய பொரு­ளா­தார செயற்­றிட்­டங்­க­ளையே பொது­வாக நோக்­கு­கின்­றனர். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தொன்று என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இருக்க முடி­யாது. ஆனால் அதனை எவ்­வாறு பெறப் போகின்றோம் என்­பதை நாங்கள் ஆய்ந்­து­ணர வேண்டும். எமது பொரு­ளா­தார விருத்­திக்கு இடம் கொடுக்க முன்­வ­ரு­ப­வர்கள் எம்­மிடம் இருந்து எதை எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை நாம் கணிக்க வேண்டும். முக்­கி­ய­மாக மத்­திய அர­சாங்கம் எந்த அடிப்­ப­டையில் எமக்கு உத­விகள் வழங்க முன்­வ­ரு­கின்­றது? இன்­றி­ருக்கும் பாரா­ளு­மன்­றத்தில் எனக்குத் தெரிந்­த­வர்­களும் என் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­களும் கணி­ச­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளிடம் இருந்து உத­வி­களைப் பெற எமக்கு அதிகம் சிரமம் இருக்­கத்­தே­வை­யில்லை. ஆனால் அவர்கள் எவ்­வாறு எமது வட­மா­கா­ணத்தை நோக்­கு­கின்­றார்கள் என்­பதை நீங்கள் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். அதா­வது எமக்கு ஏதேனும் நன்­மைகள் பெற்றுக் கொடுக்கும் போது எமது பிர­தே­சத்தை வளப்­ப­டுத்த வேண்டும், விருத்தி செய்ய வேண்டும், முன்­னேற்ற வேண்டும் என்­ப­திலும் பார்க்க தமக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்றே எதிர்­பார்க்­கின்­றார்கள். இதன் கார­ணத்­தினால் எமக்கு அதி­காரப் பகிர்வு வழங்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளையும் மாவட்ட செய­லா­ளர்கள் ஊடா­கவே நடை­மு­றைப்­ப­டுத்தப் பார்க்­கின்­றார்கள். ஆயினும் மாகா­ண­சபை உத்­தி­யோ­கத்­தர்கள் மூலமே அவை செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவை எமக்­கு­ரிய விட­யங்கள் என்­பதை ஏற்­றுள்­ள­தால்த்தான் எம்மைக் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றார்கள். 

ஆனால் எம்­மிடந் தந்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தாது மாவட்ட செய­லா­ளர்­களின் தய­வையே நாடு­கின்­றார்கள். தாமே எமக்கு வளங்­களை வழங்­கி­ய­தாகப் பின்னர் தம்­பட்டம் அடிக்­கின்­றார்கள். அதா­வது உலக நாடுகள் தரும் நிதியை எம் அலு­வ­லர்­களைக் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றார்கள். ஆனால் இடையில் தம்­மையும் மத்­தியின் அலு­வ­லர்­க­ளையும் உள் நுழைக்­கின்­றார்கள் அர­சியல் நன்­மை­க­ளுக்­காக.

அடுத்து ஒருங்­கியல் அதி­கா­ரங்­க­ளையும் அவர்­களே தாம் நினைத்­த­வாறு திட்­ட­மிட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தவே விழை­கின்­றார்கள். உதா­ர­ணத்­திற்கு பிர­தமர் எமது தீவுப் பகுதி முன்­னேற்­றத்­திற்­கென ஒரு பொரு­ளா­தாரத் திட்­டத்தை வகுத்­துள்ளார். அது­பற்றி எமக்கு எதுவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. எமது கருத்­துக்­களும் உள்­ளேற்­கப்­ப­ட­வில்லை. 

பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்டம் வர முன்னர் செயற்­பட்­ட­வாறே இப்­பொ­ழுதும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். காணிகள் சம்­பந்­த­மாக வனத்­தி­ணைக்­களம் ஊடாக தமது உள்­ளீ­டு­களைச் செய்­கின்­றார்கள். எம் மக்கள் பல காலம் இருந்து மரங்­க­ளையும் வளர்த்­து­விட்டு போர்க் காலங்­களில் இடம்­பெ­யர்ந்து சென்று திரும்பி வந்த போது அவர்­களின் காணி­களை வனத்­தி­ணைக்­களம் கையேற்­றுள்­ளது. எம்­மவர் நட்ட மரங்­களைக் காட்­டியே இவை வனத்­திற்­கு­ரிய காணிகள் என்று உரிமை கோரு­கின்­றார்கள். தான் தோன்றித் தன­மாக வனத் திணைக்­களம் நடந்து கொள்­கின்­றது. விரைவில் அவர்­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்­கின்றேன். நேற்­றைய தினம் எனக்குக் கிடைத்த தக­வல்­படி கடற்­றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் 08.03.2017 ஆம் திக­திய வர்த்­த­மா­னியில் எம்­முடன் தொடர்பு கொள்­ளாமல் நீர்வாழ் உயி­ரினச் செய்­கைக்­காக கரை­யோர /உவர் நீர்ப் பிர­தே­சங்கள் வட­மா­கா­ணத்தில் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். கிளி­நொச்சி மாவட்­டத்தில் 535 ஹெக்­டே­யரும் தீவ­கத்­துடன் சேர்ந்த யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 4560 ஹெக்­டே­யரும் மன்னார் மாவட்­டத்தில் 2193 ஹெக்­டே­யரும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டங்­களில் பாரம்­ப­ரி­ய­மாக கடல் அட்டை வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் எம் மக்­களை விரட்­டி­விட்டு ஒரு கம்­ப­னியைக் கொண்­டு­வந்து கடல் அட்டை வியா­பா­ரத்தில் ஈடு­ப­டுத்­து­வதே அவர்­களின் எண்ணம். தான் தோன்றித் தன­மாக தங்கள் வரு­மா­னத்தை ஈட்ட எம்மைப் பாவிக்கப் பார்க்­கின்­றார்கள்.

என்­னிலும் பார்க்கக் கூடிய வய­து­டைய ஒரு அமைச்சர், பல வரு­டங்­க­ளாக எனக்குத் தெரிந்த ஒருவர்,தாம் வட­மா­கா­ணத்தில் செய்ய விழையும் பொரு­ளா­தார விருத்­திக்கு முத­ல­மைச்சர் தடை­யாக உள்ளார் என்று அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வெளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருந்தார். அதன் பின் பாரா­ளு­மன்ற பிர­கா­ரத்­தினுள் அண்­மையில் நான் சென்­றி­ருந்த போது என்னை விட்டுக் கலைத்து வந்து சுற்­றி­யுள்ள யாவர்க்கும் நாங்கள் எவ்­வ­ளவு காலத்து நண்­பர்கள் என்று கூறி­விட்டு தாம் வட­மா­கா­ணத்தில் செய்யும் அபி­வி­ருத்­தி­க­ளுக்கு என்னை உதவி செய்­யு­மாறு கோரினார். அதற்­கென்ன கேளுங்கள். சட்ட திட்­டங்­க­ளுக்­கேற்ப எமது வழி­மு­றை­க­ளுக்­கேற்ப உங்கள் கோரிக்­கை­களை பரி­சீ­லனை செய்­கின்றோம் என்றேன். 

வன்­னியின் பற­வைகள் - சர­ணா­ல­யத்தில் பாரிய விடுதி கட்­டு­வது, 500 ஏக்கர் - 600 ஏக்கர் வன்­னி­நி­லத்தில் திறந்த விலங்கு காட்­சிச்­சா­லை­யொன்றை அமைப்­பது போன்ற செயற்­றிட்­டங்கள் தான் அவரின் குறிக்கோள். அதா­வது எமது வன்­னி­நிலப் பற­வை­க­ளையும், விலங்­கு­க­ளையும் பார்க்க வெளியில் இருந்து வருவோர் சொகு­சாக வந்­தி­ருந்து பார்த்­துச்­செல்ல உத­வி­ய­ளிக்­கும்­ந­ட­வ­டிக்கை எடுக்­கவே அவர் முனைந்­துள்ளார். அவ்­வா­றான குறிக்­கோள்­க­ளுக்கு நாம் ஆரா­யாமல் இடங் கொடுத்தால் பற­வை­களின் சுதந்­தி­ர­மான இயல்­பான வரு­கையில் இடை­யூறு ஏற்­படும் என்று நினைக்­கின்றேன். திறந்த விலங்குக் காட்­சிச்­சாலை அமைத்தால் அண்­டிய பகு­தி­களில் வாழும் கிரா­மத்­த­வர்­களின் வாழ்க்­கையில் விலங்­கு­களின் பாதிப்பு அதி­க­மா­கி­விடும், அவர்­களின் பாது­காப்பு கேள்விக் குறி­யா­கி­விடும். காசொன்றே கரி­ச­னை­யாக மத்­தி­யினால் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வன. இந் நட­வ­டிக்­கை­யினால் எமது உள்ளூர் வளங்­க­ளையும் இயற்கை சம­நி­லை­யையும் பேணு­வதைக் கவ­னத்­திற்­கெ­டுக்­காது வரு­மானம் ஈட்­டு­வதை மட்­டுமே மத்­திய அரசு குறிக்­கோ­ளாகக் கொண்­டுள்­ளது. இந் நட­வ­டிக்­கை­யினால் உள்ளூர் மாகாண ஆட்­சியின் கைத­ளர்ந்து விடும். எனவே இவை சம்­பந்­த­மாக நாங்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் கட­மை­யாற்றி வரு­கின்றோம்.

இன்­னொ­ருவர் எமக்கு உலக ரீதியில் மதிப்பைக் கொண்­டு­வரக் கூடிய மைதானம் ஒன்றை மகிழ்­வாக மில்­லி­யன்கள் செலவில் உரு­வாக்கித் தரு­வ­தாகக் கூறினார். வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் எமது வட­மா­காண நிர்­வா­கத்தின் பங்­க­ளிப்­புடன் எம்மைப் பங்­கு­தா­ரர்­க­ளாக ஏற்று இதைச் செய்ய நாம் விரும்­பு­கின்றோம் என்றேன். அவர் பின் வாங்­கி­விட்டார். வௌிப்­படைத் தன்­மை­யில்­லாமல் கூறு விலை­களை சர்­வ­தேச அரங்கில் கோராமல் அவர் தாம் நினைத்­த­வர்­க­ளுடன் மைதானம் அமைக்கும் உடன்­ப­டிக்­கை­களை எழு­த­விட்டால் நாம் அதில் இருந்து விடு­பட்டுப் போவோம்! எல்லாம் மத்தி மயம் ஆகி­விடும். நண்­ப­ருக்கு மட்டும் நல்ல நன்மை கிடைக்கும்!

ஆகவே தான் நாங்கள் பொரு­ளா­தார ரீதி­யாகப் பலர் கொண்­டு­வரும் செயற்­றிட்­டங்­களை மிகவும் கவ­ன­மாகப் பரி­சீ­லித்து சாத்­தி­ய­மான போது எமது அனு­ச­ர­ணையை வழங்­கு­கின்றோம். எமது அனு­ச­ரணை சில விட­யங்­களைப் பொறுத்த வரையில் கிடைக்­க­வில்லை என்­ற­வுடன் வட­மா­காணப் பொரு­ளா­தார விருத்­தியில் எமக்கு உடன்­பா­டில்லை, வந்­த­வற்றை எடுத்­தெ­றி­கின்றோம் என்று கூறு­கின்­றார்கள். அவர்­க­ளிடம் இருந்து பணம் பெற்று, தரகர் தட்­சணை பெற்று, செயற்­றிட்­டங்­களை உள்ளே ஏற்றுக் கொண்ட காலமும் இருந்­தது. அதையே பலர் இன்னும் எதிர்­பார்க்­கின்­றார்கள். எம்மால் முடி­யா­தென்­ற­வுடன் மத்­தி­யுடன் பேசி அல்­லது ஆளு­ந­ருடன் பேசி காரி­யத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்­கின்­றார்கள். எமக்கு எமது பொரு­ளா­தார விருத்­தியில் ஈடு­பா­டில்லை என்று கதை கட்டி விடு­கின்­றார்கள்.

தனித்­துவம் பறி­போய்­விடும்

எமக்கு எமது மாகாண மக்­களின் வருங்­கா­லமே முக்­கியம். அவர்­களின் வாழ்­வா­தா­ரங்­களை நீடித்து நிலை­பெறச் செய்ய ஆவன செய்­வதும் அதற்­காக வழி­ய­மைப்­ப­துமே எமது குறிக்கோள்.பணம் வந்தால்ப் போதும் என்ற அடிப்­ப­டையில் நன்­மை­களைப் பெறு­வதை நாம் ஏற்க மறுக்­கின்றோம். வரு­மா­னமே வரப்­பி­ர­சாதம் என்ற கொள்கை எமது வாழ்க்கை முறையை மாற்­றி­விடும். சுற்றுச் சூழலைப் பாதித்து விடும்.எமது தனித்­து­வத்தை நாம் தொலைத்­து­வி­டுவோம்.தனிப்­பட்ட நன்­மை­களைச் சிலர் பெறலாம். ஆனால் எமது ஒட்­டு­மொத்த வருங்­காலம் பாதிப்­ப­டையும்.

சுற்­றுலா பெயரைச் சொல்லி இன்று தெற்கில் சில இடங்கள் எந்த நிலையை அடைந்­துள்­ளன என்­பதை நாம் அறிவோம். அந்த நிலை எமக்கும் வர வேண்­டுமா?எமது கலா­சாரம், பண்­பாடு, விழு­மி­யங்­க­ளைக்­காற்­றோடு பறக்க விட்டு நாம் காசுக்­காகப் பறக்க வேண்டும் என்று எம்­மவர் எண்­ணு­கின்­றார்­களா? கலா­சாரம் தேவை­யில்லை, பண்­பா­டுகள் தேவை­யில்லை, எமது பாரம்­ப­ரி­யங்கள் தேவை­யில்லை, விழு­மி­யங்கள் தேவை­யில்லை பணம் ஒன்றே முக்­கியம் என்று எமது உறுப்­பி­னர்கள் ஒட்­டு­மொத்­த­மாக ஒன்­றி­ணைந்து பிரே­ரணை கொண்­டு­வந்து நிறை­வேற்­று­வார்­க­ளானால் தெற்கில் உள்ளோரைப் பிடித்து அங்கிருக்கும் அவர்களுக்குத் தேவையான செயற்பாடுகளையும், செயற்றிட்டங்களையும் இங்கு நிறைவேற்றத் தயார். ஆனால் அதனால் எமது தனித்துவம் பறி போய்விடும். தாயகம் அழிந்துவிடும். நாங்கள் மாகாண ரீதியாகப் பெரும்பான்மையினரின் ஒரு அலகாகி விடுவோம். அந்தக் கட்டத்தில் அதனைத் தடுக்கஎமக்கிருக்கும் தற்போதைய அதிகாரங்கள் போதுமானதாகாது என்பதை மனதில் வைத்திருங்கள். தெற்கை எதிர்பார்த்தே எமது வாழ்க்கை முறை அமையும். அதையே மத்தி விரும்புகின்றது. தமது கட்டுப்பாட்டுக்குள் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றது. அதிகாரப் பகிர்வு கூட பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே எம்மால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள்.

ஆகவே பாரிய செயற்றிட்டங்களை நாம் இயற்றவில்லை, பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என்பவர்கள் அரசியல் ரீதியாக எமக்குத் தகுந்த அதிகாரங்கள் கிடைக்கும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுகின்றேன் என்றார்.