அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இராணுவத்தில் திருநங்கைகளை சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்ட நிலையில் எதிர் வரும் காலங்களில் திரு நங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அமெக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அந்நாட்டு மக்கள் ஆதரித்தனர்.
ஆனால் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டது.
திருநங்கைகளால் இராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் காரணமாகவே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக ட்ரம்ப் விளக்கமளித்தார்.
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு தடை விதிப்பதாக தீர்பளித்தது.
இதையடுத்து எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவத்தில் திருநங்கைகள் வழக்கம் போல தேர்வு செய்யப்படுவார்கள் என அமெரிக்க பாதிகாப்பு துறை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM