கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் சினிமா பானியில் அணைத்து இருக்கிறார்.

கலிபோர்னியாவில் தற்போது பெரிய அளவில் காட்டுத் தீ உருவாகி இருக்கிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந் நிலையில் தாமஸ் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக லீலாக் தீ தற்போது அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியை விமானி ஒருவர் மிகவும் தில்லாக அணைத்துள்ளார்.

இதற்காக அவர் விமானத்தை மிகவும் தாழ்வாக ஓட்டி சென்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விமானத்தை நேரடியாக நெருப்புக்குள் விட்டு உள்ளார்.

பின் அங்கிருந்து தீயணைக்கும் சிவப்பு நிற திரவத்தை தெளித்து உள்ளார். என்ன ஆகுமோ என்று நினைக்கும் சமயத்தில் சரியாக விமானத்தை எடுத்துவிட்டு பறந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.