(ஆர்.யசி)

கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் தனித்த பயணம் அவரது வீழ்ச்சிக்கே வித்திடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.