சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்களுக்கு பரிசு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

அவர் தயாரிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் மற்றொரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவர் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான 2 பொயிண்ட் ஓ படத்தின் டீஸர் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பு நிறுவனமும் சொதப்பியதால், உடனடியாக சுதாரித்துக் கொண்ட தனுஷ், தன்னுடைய தயாரிப்பில் உருவான காலா படத்தின் போஸ்டரை வெளியிட்டு காலாவின் செகண்ட் லுக்கை  ரசிக்கவைத்திருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்