புற்றுநோயை குணப்படுத்த நானோ மருத்துவ சிகிச்சை என்ற மருத்துவ சிகிச்சை விரைவில் அறிமுகமாகவிருப்பதாக மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ரோஹித் சிறிவத்சா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பெங்களூரூவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசும் போது,‘ புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆய்வில் இருக்கிறது. இந்த புதிய முயற்சியால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகிய மருத்துவ சிகிச்சை தவிர்க்கப்படும். மேலும் இத்தகைய சிகிச்சையால் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுகளும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் நாள்களும் குறையும். இதற்காக தற்போது செலவழிக்கப்படும் மருத்துவ கட்டணமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

இவ்வித சிகிச்சையின் போது, தங்கத்தின் நானோ பர்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்று நோய் பாதித்துள்ள இடங்களுக்கு செலுத்தப்படும். பின்னர் அவை இன்ப்ரா ரெட் எனப்படும் கதிர்வீச்சால் 50 டிகிரி சென்டிகிரேட் வரைக்கு வெப்பமாக்கப்படும். இதன் காரணமாக செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்தப் பகுதிகளுக்கு செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிக்கரமாக முடிந்துள்ளது. இதன் காரணமாக புற்றுநோயை உருவாக்கும் செல்கள் எளிதில் கண்டறியப்பட்டு, அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.’ என்றார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்