வேகமாக வளர்ந்து வரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்டியங்கும் MCB வங்கி, தனது புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட புறக்கோட்டை கிளையை அண்மையில் திறந்து வைத்திருந்தது. 

இலங்கையிலுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளின் ஓரங்கமாக இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

கொழும்பு பிரதான வீதியில் இந்த கிளை அமைந்துள்ளதுடன் இலங்கையில் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதலாவது MCB வங்கிக்கிளையாக அமைந்துள்ளது.

நவம்பர் 29 ஆம் திகதி இந்தக்கிளை திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. ராஜேந்திரன் மற்றும் என் பி ஃபுட்ஸ் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் நிஹால் செனெவிரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் MCB வங்கியின் இதர சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், MCB வங்கியின் இடர் முகாமைத்துவம் - குழும தலைமை அதிகாரி நவுமன் சுக்டாய் மற்றும் கூட்டாண்மை நிதிப்பிரிவு மற்றும் சர்வதேச வங்கியியல் பிரிவு ஆகியவற்றின் குழும தலைமை அதிகாரி முஹ்டாஷிம் அஷாய் ஆகியோர் பங்கேற்றனர்.

“புறக்கோட்டை கிளையை நாம் மெருகேற்றம் செய்து மீளத்திறந்துள்ளமை என்பது உண்மையில் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இது MCB வங்கிக்கு உரித்தான வளாகம் என்பதுடன் 1996 ஆல் செயற்பாடுகள் முதன் முதலில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கிளையாகும். சில பிரதான வாடிக்கையாளர்களுடனான பயணம் இங்கே ஆரம்பமாகியிருந்ததுடன், இன்றைய நிலையில் மிகவும் உறுதியான முறையில் அதிகரித்து வரும் நிதித்தேவைகளை நிவர்த்தி செய்யும் பல தீர்வுகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு தேவைகளுக்கு பொருத்தமான சில தீர்வுகளை நாம் இலங்கையில் தெரிவு செய்து, அவற்றை சந்தைப்போக்குக்கமைய போட்டிகரமானவையாக வடிவமைத்து மீள அறிமுகம் செய்துள்ளோம். 

இவற்றை புறக்கோட்டைக்கிளையில் முதன் முறையாக காண முடியும்” என MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி தெரிவித்தார்.

நவீன கிளை வங்கியியல் கொள்கை முறைக்கமைய புதிய வடிவமைப்பு அமைந்துள்ளதுடன், பொதுத்தோற்றம் சாதாரண நியமங்களை பின்பற்றி அமைந்துள்ளதுடன், MCB வங்கியின் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வங்கியியல் அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 

பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் காணப்படும் MCB கிளைகளில் பின்பற்றப்படும் பொதுவான கூட்டாண்மை அலங்கரிப்பு இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது.

1994 இல் இலங்கையில் MCB வங்கி தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்ததுடன் நாட்டுக்கு பெறுமதியான பரந்தளவு சர்வதேச மற்றும் பிராந்திய அனுபவத்தை தனது பிரதான பெறுமதிகளான நேர்மை, மதிப்பு, சிறப்பு, வாடிக்கையாளர் மையத்தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கி வருகிறது. இலங்கையில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகளில் இரண்டாவது மாபெரும் கிளை வலையமைப்பைக்கொண்ட வங்கியாக திகழ்கிறது. மேலும் ICRA லங்கா லிமிட்டெடின் [SL] A+ (Stable) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மருதானை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, கண்டி, காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் கிளைகள் அமைந்துள்ளன.