இருபதாவது மாடியில் இருந்து நிர்வாண நிலையில் மொடல் ஒருவர் விழுந்து பலியான சம்பவம் மலேசியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டச் நாட்டைச் சேர்ந்த 19 வயதுடைய இவனா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் என்ற மொடலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

மலேசியாவின் பட்டாலிங் ஜெயா பகுதியில் தங்கி மாடலிங் செய்து வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றவர் இவர். கடந்த வியாழக்கிழமை  தங்கி இருந்த கட்டிடத்தின் இருபதாவது மாடியில் இருந்து தவறி ஆறாவது மாடியின் பால்கனியில் விழுந்துள்ளார்.

நிர்வாணமாக கிடந்த இவனா  சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இருபதாவது மாடியில் மாடலுடன் அமெரிக்கர் ஒருவரும் இன்னொரு பெண்ணும் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் தூங்கச் சென்றபின் களியாட்டத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய இவானா  போதையில்  தவறி விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் விடயமறிந்து மலேசியாவிற்கு வந்த இவானாவின் பெற்றோர் பொலிஸார் வழக்கை விரைவில் முடிப்பதற்காகவே இவானா போதையில் தவறி விழுந்திருக்கலாம் என கூறுகின்றனர் என்றும் தங்களது மகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்;றம் சாட்டுகின்றனர்.

தங்களது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கூறி மலேசியாவிலுள்ள டச் தூதுவரை தொடர்பு கொண்டுள்ளனர் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.